நெல்லையில் திடீர் பஸ் கட்டணம் உயர்வு
நெல்லை: நெல்லை- தென்காசி இடையிலான பஸ் கட்டணத்தை சில கண்டக்டர்கள் தாங்களாகவே உயர்த்தியுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
அந்தக் கண்டக்டர்களுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கண்டக்டர்கள் கண்டனம் தெதரிவித்துள்ளனர்.
தென்காசி-நெல்லைக்கு தினமும ஆயிரக்கனக்கானோர் பஸ்களில் பயணம் செய்கின்றனர். இதற்காக அரசு போக்கவரத்து கழகம் மூலம் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில், எல்எஸ்எஸ் மற்றும் லோக்கல் பஸ்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு கட்டணமாக 17 ரூபாய் 50 காசுகளுக்கு பதில் 18 ரூபாயாக பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் பாவூர்சத்திரத்தில் இருந்து ரூ.14.50க்கு பதில் 15ம், ஆலங்குளத்தில் இருந்து ரூ.10.50க்கு பதில் 11ம், தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு 7.50க்கு பதில் 8ம், வசூலிக்கப்படுகிறது.
வழக்கமாக கொடுக்கும் கட்டணத்தில் இருநது 50 காசு அதிகமாக கேட்கிறீர்களே, பஸ் கட்டணம் ஏற்றப்ட்டுள்ளதாக அரசு அறிவிக்கவில்லையே என்று அப்பாவித்தனமாக பயணிகள் கேட்டால், எங்களுக்கு டிப்போவில் இருந்து அதிகாரிகள் உத்தரவிட்டதால்தான் அதிகமாக வசூலிக்கிறோம் என்று கண்டக்டர்கள் கூறுகிறார்கள்.
இதனால் பயணிகள் அதிர்ச்சியும், கடுப்பும் அடைந்துள்ளனர். அதேசமயம், குறிப்பிட்ட சில கண்டக்டர்கள் இவ்வாறு வசூலிப்பதற்கு, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கண்டக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வழக்கமான கட்டணத்தையே வசூலித்து வருகின்றனராம்.
ஆனால் 50 பைசா சில்லறை கொடுப்பதில் ஏற்படும் சிக்கல் காரணமாகவே சில கண்டக்டர்கள் தாங்களாகவே இப்படி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் தலையில் மிளகாய் அரைக்க ஒரு அளவே இல்லையா?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications