2வது தலைநகர் திருச்சி-இ.கம்யூ கோரிக்கை!
திருச்சி: திருச்சியை சென்னைக்கு அடுத்து 2வது தலைநகராக, இணைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் 3 நாள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில், திருச்சி நகரம், தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். மாநிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் மையத்தில் உள்ளதால், இங்கு தலைமைச் செயலகத்தின் சில பிரிவு அலுவலகங்களையும், சில துறைகளின் அலுவலகங்களையும் இங்கு மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் 2வது தலைநகராக, இணைத் தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மற்றொரு தீர்மானத்தில், திருச்சியில் புறநகர் மின்சார ரயில் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் திருச்சி புறநகர்ப் பகுதிகளான திருவெறும்பூர், துவாக்குடி, பொன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிறைய பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்னொரு தீர்மானத்தில், திருச்சி அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக அளவுக்கு தரம் உயர்த்த வேண்டும்.
ஏற்கனவே இதுதொடர்பான திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. ஆனால் திடீரென அதை சேலம் மருத்துவமனைக்கு மாற்றி விட்டனர். இதனால் திருச்சி நகர மக்கள் பெரும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்தத் திட்டத்தை மீண்டும் திருச்சிக்கே கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications