வேன் கவிழ்ந்து டிரைவர் பலி- 40 குழந்தைகள் காயம்
அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து விழுந்ததில் 40 குழந்தைகள் படுகாயமடைந்தனர். வேன் டிரைவர் உயிரிழந்தார்.
அரூர் அருகே உள்ள கோபாலபுரம் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. அப்பகுதியை சுற்றிலும் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர்.
தினசரி வேன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்கிறார்கள். இன்று காலையில் வேன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். அம்மாபாளையம் என்ற இடத்தில் வேன் சென்றபோது திடீரென கவிழ்ந்தது.
வேன் வேகமாக போனதால்தான் கவிழ்ந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். வேன் கவிழ்ந்ததில் அதிலிருந்த 40 குழந்தைகள் படுகாயமடைந்தனர். பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. வேனுக்குள் புத்தக பைகளும், சாப்பாடுக் கூடைகளும் தாறுமாறாக இறைந்து கிடந்தன.
விபத்தில் சிக்கிய வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications