சிவாஜி கணேனுக்கு அரசே நினைவிடம் அமைக்க கோரிக்கை
ஸ்ரீரங்கம்: சென்னையில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு நினைவிடம் மைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு, சிவாஜி சமூக நல பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பேரவையின் தலைவர் சந்திரசேகரன் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நினைவிடம் அமைப்பதற்காக அரசு 0.65 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இந்தப் பொறுப்பை தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இதுதொடர்பாக எந்த நடவடிக்கையையும் நடிகர் சங்கம் எடுக்கவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக 2005ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி சட்டசபையில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
எனவே முதல்வர் கருணாநிதி இதில் தலையிட்டு அரசு சார்பில் நினைவிடம் அமைத்து, சிவாஜி கணேசனுக்கு கெளரவம் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வரை சந்தித்துப் பேசவுள்ளோம்.
மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் அனைத்து மாநகராட்சிகளிலும் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலைகளை அரசு நிறுவ வேண்டும் என்று பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விரைவில் தஞ்சை மற்றும் திருச்சி நகரங்களில் சிவாஜி கணேசன் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் சந்திரசேகரன்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications