கர்ப்பிணி அண்ணியை கற்பழித்துக் கொன்ற கொடூரன்
சென்னை: அண்ணன் வெளியூர் சென்ற நிலையில் அவரது 6 மாத கர்ப்பிணி மனைவியை கற்பழித்துக் கொலை செய்துள்ளான் தம்பி. இந்தக் கொடூரம் நேற்றிரவு சென்னையில் நடந்தது.
சென்னை பிராட்வேயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவர் ராம்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ என்ற சுஜாதா (27). கடந்த ஜூன் மாதம் தான் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்கள் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தனர். ஜெயஸ்ரீ இப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ராம்குமாரின் தம்பி கண்ணன் (வயது 26). இவர் வேலை தேடி சென்னை வந்தார். அண்ணன் வீட்டில் தங்கிய அவர், அண்ணனின் நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்தார்.
இந் நிலையில் அண்ணியான ஜெயஸ்ரீ மீது கண்ணனுக்கு காமப் பார்வை விழுந்தது. கடந்த வாரம் அலுவலக வேலையாக ராம்குமார் பெங்களூர் சென்றுவிட, வீட்டில் ஜெயஸ்ரீயும், கண்ணனும் இருந்தனர்.
நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கண்ணன், ஜெயஸ்ரீயிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தார். ஜெயஸ்ரீ தப்ப முயன்றுள்ளார். ஆனால், டிவியின் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு பலவந்தமாக ஜெயஸ்ரீயை அவர் கற்பழித்துள்ளார்.
ஜெயஸ்ரீ உதவி கேட்டு அலறிய சத்தம் டிவி சத்தத்தால் வெளியில் கேட்கவில்லை. ஒரு வழியாக அவனிடமிருந்து தப்பிய ஜெயஸ்ரீ படுக்கை அறையில் இருந்து ஹாலுக்கு ஓடினார்.
அவர் தன்னைக் காட்டிக் கொடுக்கத்தான் ஓடுகிறார் என்று பயந்து போன கண்ணன், ஜெயஸ்ரீயின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினான்.
இதில் மயங்கிய ஜெயஸ்ரீயை கத்தியால் வயிற்றில் குத்தினான். ரத்தம் கொப்பளிக்க அலறிய ஜெயஸ்ரீ ஹாலில் விழுந்து துடித்தார். நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.
இதற்கிடையே வீட்டு உரிமையாளர் மகள் மாடியில் இருந்து டி.வி சத்தம் மிக அதிகமாக கேட்டதால் ஜெயஸ்ரீயைப் பார்க்க மாடிக்கு சென்றார். அங்கு ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு வீட்டுக்கு ஓடி போலீசாருக்கு தகவல் தந்தார்.
இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
கண்ணனிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான். இதையடுத்து அவனை போலீசார் தங்கள் ஸ்டைலில் விசாரிக்கவே நடந்ததை ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான். ஜெயஸ்ரீயை, கண்ணன் கற்பழித்ததற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.
ஜெயஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பெங்களூர் சென்றுள்ள ராம்குமார், மற்றும் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications