வன்முறையுடன் நடந்து முடிந்த பாக். தேர்தல்

காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியவுடன் ஸ்வாத் வேலி பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் காயமடைந்தனர். லாகூரில் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அப் பகுதியில் வன்முறை வெடித்தது.
அதிகாலையில் வட மேற்கு பாகிஸ்தானில் ஒரு வாக்குச் சாவடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாரும் அங்கில்லை.
தெற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானிலும் தொடர்ச்சியாக பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் காயமடைந்துள்ளனர். குவேட்டா பகுதியில் வன்முறையுடன் தேர்தல் நடந்து முடிந்தது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் வாக்களிக்க வந்தனர்.
தேர்தலையொட்டி சுமார் 80,000 போலீசாரும் ராணுவத்தினரும் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 8ம் தேதி தேர்தல் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இன்று நடந்தது.
முறையாக தேர்தல் நடந்தால் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஷ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சியும் பெரும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்துடன் நான்கு மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முஷாரப்பின் எதிர்ப்பாளர்கள் வென்றால் அவரது பதவிக்கு சிக்கல் எழக்கூடும்.
தனக்கு சிக்கல் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்பவர் முஷாரப். ஆட்சியைக் கூட கலைப்பார். இதனால் இந்தத் தேர்தல் உலகம் முழுவதும் மிகக் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications