பிற ஏடிஎம்களில் பணம் எடுப்பது இலவசமாகிறது
மும்பை: வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது இலவச சேவையாக்கப்படும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வி.லீலாதர் தெரிவித்துள்ளார்.
தற்போது நமது வங்கி அல்லாத பிற வங்கி ஏடிஎம் மையங்களில் கார்டு போட்டு பணம் எடுத்தால் அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். பணம் எடுக்கும்போதே அதை பிடித்துக் கொள்வார்கள். இப்போது இந்த முறையை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் நடந்த யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் 2001வது கிளைத் தொடக்க விழாவில் லீலாதர் பேசுகையில், பிற வங்கி டெபிட் கார்டுகளை போட்டு பணம் எடுப்போருக்கு தற்போது வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
வாடிக்கையாளர்கள், வெறும் 500 ரூபாய் எடுக்க வேண்டும் என்றாலும் கூட ரூ. 250 வரை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.
இங்கிலாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால், சேவைக் கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை. அதேபோல இந்தியாவிலும் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2009-10ம் நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற வங்கி ஏடிம் மையங்களில் பணம் எடுப்போர் வெறும் ரூ. 20 கட்டணம் மட்டும் கட்டினால் போதும். இது பணப் பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஒரு ஏடிஎம் மையத்தை அமைக்க முன்பு ரூ. 30 லட்சம் வரை செலவானது. தற்போது அது வெகுவாக குறைந்து ரூ. 6 லட்சம் என்று குறைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைக் கறக்கும் செயலை நிறுத்தியாக வேண்டும் என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஜூன் மாதம் பொறந்தாச்சு.. ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு.. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications