'ஈவ்-டீசிங்': 5 யுனானி மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாத மாணவியை ஈவ் டீசிங் செய்ததாக 5 யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்தக் கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னையில் உள்ள யுனானி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஷாகுல் அமீது மீது சமீபத்தில் பல்வேறு புகார்களைக் கூறி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மாற்றப்பட்டார்.
இந் நிலையில், சென்னை பெரியார் நகர் 12வது தெருவில் வசிக்கும் ஆயிஷா நியோபர் என்ற மாணவி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் யுனானி மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறேன். நான் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சிலர் என்னை கேலி செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர்.
அந்த மாணவர்களின் செயலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ஆயிஷா.
இதையடுத்து துணை ஆணையர் ஜெயகவுரி தலைமையிலான போலீஸ் படை சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு விரைந்தது.
அங்கிருந்த மாணவர் பேரவை தலைவர் நயீப் அகமது, முகம்மது இமாசுதீன், முகம்மது ஆதம், சமீத் சமீனுல்லா, ஆதிப் அசேன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
பின்னர் நேற்று இரவே நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் யுனானி மருத்துவக் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட முதல்வரின் தூண்டுதலின் பேரிலேயே ஆயிஷா இந்தப் புகாரை கொடுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முதல்வரின் தூரத்து உறவினர்தான் ஆயிஷா. எனவே முதல்வரின் தூண்டுதலின் பேரிலேயே அவர் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் பதட்டமாக இருப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications