50 வருடங்களாக தனிமையில் தவிக்கும் மன்னரின் மனைவி!
காத்மாண்டு: மறைந்த நேபாள மன்னர் திரிபுவனின் அந்தப்புரத்து பெண்ணான, 91 வயது பெண்மணி கடந்த 50 ஆண்டுகளாக ராணுவப் பாதுகாப்புடன், வெளியுலக தொடர்பே இல்லாமல் தனிமையில் வசித்து வருகிறார்.
பாட்டி ராணி என்ற பட்டப் பெயருடன் வசித்து வரும் இந்தப் பெண்மணி, நேபாளத்தின் தமாங் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராம். இவரது பெயர் யாருக்கும் தெரியவில்லை. நேபாள ராஜ வம்சத்துக்குச் சொந்தமான நாராயண்ஹித்யா என்ற அரண்மனையின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் இந்தப் பாட்டி வசித்து வருகிறார்.
இவர் மறைந்த மன்னர் திரிபுவனின் அந்தப்புரத்து அழகிகளில் ஒருவராக இருந்தவர். இவர் இருக்கும் வீட்டுக்கு ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாரும் இவரை சந்திக்க அனுமதி கிடையாது. அவரும் வெளியே போக அனுமதி கிடையாதாம்.
இதே அரண்மனை வளாகத்தில்தான் திரிபுவனின் பேரனான மன்னர் ஞானேந்திரா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தப் பாட்டி இருக்கும் வீடு எந்தவித வசதியும் இல்லாமல் படு மோசமான நிலையில் இருக்கிறதாம். மன்னர் திரிபுவன் 1955ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பின்னர் இந்த வீட்டுக்கு வந்து விட்டாராம் இந்தப் பாட்டி.
இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராஜ குடும்பத்தினர் இந்தப் பாட்டியை தங்களில் ஒருவராக அங்கீகரிக்காமல் ஓரம் கட்டி விட்டனர். இருப்பினும் பாட்டி ராணி என்று பொருள்படும் ஜிஜியு முமஜ்யு ராணிசாஹேப் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்துள்ளனர். அதேசமயம், அரச குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஸ்ரீபாஞ்ச் என்ற பட்டத்தை கொடுக்கவில்லை.
இந்த பாட்டியை இதுவரை யாரும் பார்த்ததில்லையாம். வீட்டு அருகே போக அனுமதி இல்லை என்பதால் இவரது முகம் யாருக்கும் தெரியாதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications