தேசிய விருது: பரிசு தொகை கிடுகிடு உயர்வு
டெல்லி: தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தரப்படும் பரிசுத் தொகையை ஐந்து மடங்காக மத்திய அரசு அதிகரித்துள்ளது. தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள், திரைப்படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிசுத் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து தற்போது பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சிறந்த பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஸ்வர்ண கமல் (தங்கத் தாமரை) விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திரைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிறந்த நடிகர், நடிகை, சிறந்த பாப்புலர் படம், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம், சிறந்த இயக்குநர், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பின்னணிப் பாடகர், பாடகி உள்ளிட்ட அனைத்து விருதுகளுக்குமான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் இந்த பரிசுத் தொகை உயர்வு அமலுக்கு வருகிறது. 2006ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications