திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-ஜெ.
சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாக பேசப்படும் பேச்சு, குற்றம் ஆகாது என்று எந்த ஒரு வரியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்பதை நான் சட்டமன்றத்தில் தெரிவித்தேன். தொலைக்காட்சிப் பேட்டியிலும் இதே கருத்தை எடுத்துரைத்தேன்.
இந்த உண்மையை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாக பேசப்படும் பேச்சு, குற்றம் ஆகாது என்று தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை அவர்களது நோக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. மேற்படி அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் வன்னிய அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக ஆயுதங்களையும், பலவிதமான பொருட்களையும் கடத்தும் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்படுகிறார். அன்றே விடுதலை செய்யப்படுகிறார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறைத்தலைவர் அறிவிக்கிறார். ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து கருத்துரிமை மாநாடு நடக்கிறது.
இந்த மாநாடு நடத்த காவல்துறை தலைவரின் அறிவிப்பையும், எச்சரிக்கையையும் மீறி யார் திருமாவளவனுக்கு அனுமதி கொடுத்தது?
திருமாவளவனுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கும் நோக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்ய கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்?
திருமாவளவன் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? என்பதை எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசின் முதலமைச்சராகிய கருணாநிதிக்கு நிச்சயம் உண்டு.
என்னுடைய முக்கியமான கேள்விகள்:
ரத்து செய்யப்பட்ட பொடா சட்டத்தை பற்றியே கருணாநிதி ஏன் பேசிக் கொண்டிருக்கிறார்?.
சட்டமன்றத்தில் பேசும் போது கூட, ரத்து செய்யப்பட்ட பொடா சட்டத்தை குறிப்பிட்டு, நடவடிக்கை எடுக்க சட்டப்படி வழியில்லை என்று ஏன் கூறினார்?
தற்போது உள்ள சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரைமுருகன் அறிவித்தார். அதன்பிறகு திருமாவளவன் பேசிய பேச்சுக்கு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் அறிவித்திருந்த போது, விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.
இந்தக் கேள்விகளை கேட்டேன், அறிக்கைகள் வாயிலாகவும் திரும்பத் திரும்ப கேட்டு வருகின்றேன். ஆனால், இந்த நாள் வரை இந்த கேள்விகளுக்கு கருணாநிதியிடமிருந்து பதில் வரவில்லை.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அப்ப உங்கள் கூட்டணியில் உள்ள வைகோ புலிகளை தீவிரமாக எதிர்க்கிறாரோ...
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications