சிங்கம்புணரி ஜல்லிக்கட்டில் இளைஞர் பலி-70 பேர் காயம்
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியானார். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை என்ற இடத்தில் உள்ள கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில், ஐந்து நில நாட்டார்கள் சார்பில் திருவிழா கொண்டாடப்படும். அன்றைய தினம் ஜல்லிக்கட்டும் நடத்தப்படும்.
நேற்று கோவில் விழாவும் ஜல்லிக்கட்டும் நடத்தப்பட்டது. இதில், 214 காளைகள் கலந்து கொண்டன. 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை அடக்க களம் புகுந்தனர்.
காளைகள அடக்குவதற்கு முன்பு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்திருந்தனர். மாடுகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முதல் மாடு அவிழ்த்து விடப்பட்டதும் அது சீறிக் கொண்டு பாய்ந்தது. அப்போது மாடு குத்தியதில், திருப்பத்தூர் அருகே உள்ள பரங்கிர்ணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (21) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதேபோல வெங்கலூர் விஜயசாரதி, சிங்கம்புணரி சுரேஷ் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் விஜயசாரதியும், சுரேஷும் படுகாயமடைந்ததால் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே டாக்டர் முத்துவீரலட்சுமி தலைமையிலான மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது.
திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டையொட்டி அரளிப்பாறை மலை முழுவதும் மக்கள் கூடியிருந்தாதல் அது பெரும் ஜனக் காடாக காட்சி அளித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications