மன்னாரில் கடும் சண்டை-95 பேர் பலி: சில பகுதிகளை மீட்டது ராணுவம்?

மன்னார் மற்றும் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இலங்கை விமானப்படை குண்டு வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
வட மேற்கு மன்னாரில் உள்ள அடம்பன் பகுதியில்தான் தாக்குதல் கடுமையாக இருந்தது.
மன்னாரின் பரப்பகந்தல் பகுதியில் 30 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனராம். பாலைக்குழி பகுதியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மொத்தமாக 92 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத் தரப்பில் 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடத்தல்:
இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்படவிருந்த மருத்துவப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் என்ற கடலோர கிராமத்தில் சோகையன்தோப்பு என்ற இடத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருவரை நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பரமக்குடியைச் சேர்ந்த அப்துல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பது தெரிய வந்தது.
ஆனால் அவர்கள் பேச்சில் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீஸார் பறிமுதல் செய்னர். இந்த சமயத்தில் ஒரு மாருதி வேன் வந்தது.
அதையும் தடுத்து போலீஸார் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர். வேனில், காரன்வலசை என்ற ஊரைச் சேர்ந்த நவாஸ்கான், முகம்மது இப்னு என்பது தெரிய வந்தது.
வேனில், 5 டாக்டர் கோட், 5 தொப்பி, 5 சுடிதார், 5 பேர் அன்ட் லவ்லி ஆகியவை இருந்தன.
இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, விடுதலைப் புலிகளுக்கு கடத்த இவற்றைக் கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் பல பொருட்களை அவர்கள் கடத்தி வருவதும் தெரிய வந்தது. அந்த வேனில் உர மூட்டைகளும் இருந்தன.
பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications