சொத்து: ஜெ. மனு தள்ளுபடி-மார்ச் 17 முதல் சாட்சிகள் விசாரணை
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து வரி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கில் வரும் மார்ச் 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தது.
கடந்த 1997ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளக் ஜெயலலிதா மீது வருமான வரித் துறையினர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.
அதில், 93-94ம் ஆண்டிற்கான சொத்து வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இதனால் வருமான வரி சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஆர்.பிரேம்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞரான அதிமுக எம்பி ஜோதி, சொத்து வரி தொடர்பான அப்பீல் மனு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
வருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞர் ராமசாமி ஆஜராகி வாதாடுகையில், இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நடக்கவில்லை, வழக்கு தொடர்பான ஆதார சான்றுகளும் தாக்கல் செய்யப்படாமல் வழக்கு ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அவர் மீதான சொத்துவரி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கில் வரும் மார்ச் மாதம் 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார்.
93-94ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி ஜெயலலிதா மீது இன்னொரு வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications