வறுமை-முதலிடத்தில் ஒரிஸ்ஸா!

2007-2008ம் ஆண்டுக்கான எக்கனாமிக் சர்வே என்ற இந்த ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் சிதம்பரம்.
அதில், ஒரிஸ்ஸாவில் தான் நாட்டிலேயே மிக ஏழ்மையான நிலையில் அதிக மக்கள் வசிக்கின்றனர். ஒரிஸ்ஸாவைத் தொடர்ந்து பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏழை மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
அதே நேரத்தில் ஏழைகளின் அளவு மிகக் குறைவாக இருப்பது பஞ்சாபில் தான். அதைத் தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, கேரளா, ஆந்திராவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
2004-05ம் ஆண்டின் ஆய்வுப்படி நாட்டில் 30 சதவீத கிராமப் பகுதி மக்கள் பேர் 12 ரூபாயில் தான் ஒரு நாளையே கழிக்கின்றனர் அதாவது மாதத்துக்கு ரூ. 365.
இவர்களது எண்ணிக்கை சட்டீஸ்கரில் 57 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 47 சதவீதமாகவும், பிகார், ஜார்க்கண்டில் 46 சதவீதமாகவும் உள்ளது.
கேரளாவில் இது மாதத்துக்கு ரூ. 690 ஆக உள்ளது. சுமார் 57 சதவீத கேளர கிராம மக்கள் மாதம் ரூ. 690ல் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இது பஞ்சாபில் 51 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும்.
அதே போல நகர்ப் புறங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் 30 சதவீதம் பேர் ஒரு நாளை ரூ. 19ல் ஓட்டுகின்றனர். அதாவது மாதத்துக்கு ரூ. 580.
இது ஒரிஸ்ஸாவில் 50 சதவீதமாகவும், பிகாரில் 55 சதவீதமாகவும் உள்ளது.
கேரளத்தை பொறுத்தவரை 28 சதவீத நகர்ப்புற மக்களின் மாத சராசரி ஊதியம் ரூ. 1,380 ஆக உள்ளது. பஞ்சாபில் இது 27 சதவீதமாக உள்ளது.
நகர்ப் பகுதிகளில் செலவிடும் திறனில் (வசதி) மக்களிடம் உள்ள வேறுபாடு நாட்டிலேயே சட்டீஸ்கரில் தான் மிக அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் இந்த வேறுபாடு அதிகமாக உள்ளது.
குஜராத்த், அஸ்ஸாம், ஹிமாச்சலில் மக்களின் வசதி வாய்ப்புகளில் உள்ள இடைவெளி குறைவாக உள்ளது. எல்லோருக்கும் சமச்சீரான வசதிகள் கிடைத்துள்ளன.
கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை இந்த வேறுபாடு மிக அதிகமாக உள்ள மாநிலமும் கேரளம் தான். இதைத் தொடர்ந்து ஹரியாணாவும் தமிழகமும் உள்ளன.
அஸ்ஸாமில் இந்த வேறுபாடு குறைவாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications