'மப்'பிடம் சிக்கி மீண்ட எஸ்.ஐ.!
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: அட்வைஸ் செய்த சப்-இன்ஸபெக்டரை போதையில் இருந்த நபர் கத்தியால் குத்த முயன்றார். இதையடுத்து போலீஸார் அந்த 'குடிமகனை' கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த அழகர்சாமி குடித்து விட்டு போதையில் காவல் நிலையம் அருகே நின்று கொண்டு ஒரு சமூகத்தினரை மிகவும் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், அழகரை அணுகி, இப்படியெல்லம் பேசக்கூடாது, வீட்டுக்குப் போப்பா என்று அட்வைஸ் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அழகர்சாமி, இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயமுருகனை குத்த முயன்றார். ஜெயமுருகன் விலகிக் கொண்டதால் உயிர் தப்பினார்.
இதைப் பார்த்த போலீஸார் விரைந்து வந்து அழகர் சாமியை பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications