கிண்டி: 2 மே.வங்க தொழிலாளர்கள் தீயில் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிண்டியில் இன்று காலை நடந்த பெரும் தீவிபத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்காக அருகிலேயே தற்காலிகக் குடிசைகள் போட்டுத் தரப்பட்டுள்ளன.
இன்று காலை இந்த குடிசையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ராபின் போரோ (22), பீம் கபூர் (18) ஆகியோர் பரிதாபாக உயிரிழந்தனர். இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் செய்து கொண்டிருந்தபோது இந்த தீவிபத்து ஏற்பட்டது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
--












Click it and Unblock the Notifications