ரூ. 100க்கு பான் கார்டு பெறும் புதுத் திட்டம் அறிமுகம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, தபால் அலுவலகத்தில் ரூ. 100க்கு பான் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தபால் நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் பாண்டியன் கூறுகையில், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு (நிரந்தர கணக்கு எண்) பெற தபால் அலுவலகம் மூலம் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது வரை மக்கள் சில தனியாரிடம் அதிக பணம் கொடுத்து பான் கார்டு வேண்டி காத்திருந்தனர். ஆனால் இனி கால தாமதத்தைத் தவிர்க்கவும், பணம் விரையம் ஆவதை தடுக்கவும் தபால் அலுவகம் உதவி செய்கிறது.
வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விண்ணப்பங்கள் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் இரண்டு ஸ்டாப் சைஸ் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அரசு அறிவித்த 8 வகையான ஆவணங்களின் நகல்களைக் கொடுத்து பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவற்றுக்கு ஆகும் மொத்த செலவு ரூ. 100 மட்டுமே என்றார்.
-
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications