பெங்களூரில் 'சேஞ்ச் இந்தியா' அமைப்பு தொடக்கம்
பெங்களூர்: அரசு நிர்வாகத்தில் திறமை, ஒளிவுமறைவற்ற போக்கு, நம்பகத்தன்மையை கொண்டு வரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள 'சேஞ்ச் இந்தியா' இயக்கம் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ராயல் டெலிவரி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஆர்.கே.மிஸ்ரா, சேஞ்ச் இந்தியா அமைப்பைத் தொடங்கி வைத்தார்.
மக்கள் சேர்ந்து நடத்தும் இயக்கம்தான் சேஞ்ச் இந்தியா. அரசு நிர்வாகத்தில் நிலவும் மெத்தனம், அசமஞ்சம் உள்ளிட்டவற்றை மக்கள் இணைந்து போக்கும் நோக்குடன் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மக்கள் தொடர்பான பணிகளை மக்களே சேர்ந்து எடுத்து நடத்தி அதன் மூலம் அரசையும் செயல்பட வைப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் மக்களுக்காக உழைக்க அரசு இயந்திரத்தை திருப்பும் நோக்கமும் இந்த இயக்கத்திடம் உள்ளது.
சேஞ்ச் இந்தியா தொடக்க விழாவில் பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனங்களின் நிர்வாகிகள், வங்கித் துறை, நிதித்துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய லீட் இந்தியா போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 8 பேரில் ஒருவரான தேவங் நானாவதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நானாவதி பேசுகையில், சேஞ்ச் இந்தியா போன்ற இயக்கத்தால் இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தை ஆக்கப்பூர்வமான பாதையில் திருப்ப முடியும் என்றார்.
சிம்பொனி சர்வீஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அஜய் கேலா, கூகுள் பிரசாத் ராம் ஆகியோரும் பேசினர்.
விரைவில் சேஞ்ச் இந்தியாவின் கிளைகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் அந்தந்த நகரங்களின் பிரச்சினைகளை கையில் எடுக்க சேஞ்ச் இந்தியா திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 4 கோடி இளைஞர்களை இந்த இயக்கத்தில் சேர்க்க சேஞ்ச் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
சேஞ்ச் இந்தியா குறித்த மேலும் விவரங்கள் அறிய:
[email protected] என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
சேஞ்ச் இந்தியா இயக்கம்,
விமான நிலையம்- வர்த்தூர் சாலை,
பெங்களூர் - 560066
பேக்ஸ் 080--2852-5356
இணையதளம்:
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications