ஆளுநர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள், சுவர் ஏறிக் குதித்த 3 வாலிபர்களைப் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். அவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்களைப் போல உள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் உள்ளே இரவில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். பின்னர் அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் குடுக் கொகியா, ரஞ்சித் சித்தார்டியா என்பது தெரிய வந்தது. இருவரும் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள். ஆளுநர் மாளிகைக்குப் பின்புறம் நடக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
ஏன் உள்ளே வந்தீர்கள் என்று கேட்டபோது, குடுக் கொகியாவின் தம்பி சித்திக் கொகியாவுக்கு மன நலம் சரியில்லையாம். இந்த நிலையில் அவர் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்து விட்டாராம். அவரைத் தேடித்தான் தாங்களும் வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்த சித்திக்கைத் தேடினர். அவர் ஒரு மரத்தின் கீழ் படுத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் மீட்டனர்.
3 பேரும் உள்நோக்கத்துடன் வரவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போலப் பேசுகின்றனர். எனவே அவர்களை எச்சரித்து அனுப்ப முடிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications