40 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்களை தின்ற பசு மாட்டுக்கு ஆபரேஷன்
நெல்லை: நெல்லையில் 40 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்களை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டிற்கு அரசு கால்நடை மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து காப்பாற்றினர்.
பாளையங்கோட்டை சட்டம்-ஒழுங்கு கமிஷனர் அலுவலகம் அருகே நேற்று ரோட்டில் ஒரு பசு மாடு எழுந்திருக்க முடியாமல் உயிருக்க போராடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்க டாக்டர் எல்லப்பன், ஊழியர்கள் ஆகியோர் ஒரு வேனில் பசுமாட்டை ஏற்றி நெல்லை ஜங்ஷன் அரசு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாட்டிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மாட்டின் வயிற்றில் பாலீதின் கவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் மாட்டின் குடல்களில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடித்து கால்நடை டாக்டர்கள் பாரதி, சந்திரபோஸ், கிருஷ்ணசாமி ஆகியோர் உடனடியாக மாட்டிற்கு ஆபரேஷன் செய்து வயிற்றில் இருந்த 40 கிலோ பாலிதீன் கவர்களை வெளியில் எடுத்தனர். பின்னர் மாட்டிற்கு சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினர்.
பொதுமக்களில் பலர் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்களை தெருவில் எறிந்து விடுவதால் அதனை சாப்பிடும் கால்நடைகள் குடல்களில் அடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விடுகின்றன. பாலிதின் கவர்களை உபயோகிப்பதை குறைந்து கால்நடைகள் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications