ரேசன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் 'வார்னிங்'
சென்னை: மெத்தனமாகவும், அலட்சியமாகவும் பணியாற்றும் ரேசன் கடை ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என
உணவுத்துறை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
சென்னை மாநகரில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று காலை அதிகாரிகளுடன் வேலு ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசுகையில்,
சென்னை மாநகரில் ராயபுரம், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், வில்லிவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களில் உள்ள ரேசன் கடைகள் தொடர்பாக ஏதாவது குறைகள் இருந்தால் துணை ஆணையர் (வடக்கு) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 28551028 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மைலாப்பூர், பரங்கிமலை, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, தி.நகர் மற்றும் தாம்பரம் ஆகிய மண்டலங்களில் உள்ளவர்கள் துணை ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 28551026 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
நியாய விலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்றாலும், எடை குறைவாக பொருட்கள் வழங்கப்பட்டாலும், ரேசன் கடை ஊழியர்கள் இருப்பு இல்லை என்று கூறினாலும், அரசு தேவையான அளவு பொருட்கள் வழங்கவில்லை என்று கூறினாலும் அது குறித்து புகார் தெரிவி்க்கலாம்.
அவர்களுடைய புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வதுடன் புகார் கொடுத்தவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும்.
பொது மக்கள் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் உரிய விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெத்தனமாகவும், அலட்சிய மனப்பான்மையுடன் பணிபுரியும் அலுவலர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேலு.
பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு...












Click it and Unblock the Notifications