சென்னை-அதிகாரி வீட்டில் ரூ10 லட்சம் நகை கொள்ளை
சென்னை: சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயிலில் மின்வாரிய அதிகாரி வீட்டில் பட்டப்பகலில் புகுந்த திருடர்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகரில் வசிப்பவர் முனுசாமி (50). இவர் மீஞ்சூரில் மின்வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள், பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார்.
உடனே திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முனுசாமி வீட்டின் பீரோவில் வைத்திருந்த 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி சாமான்கள் மற்றும் ரூ.28,000 ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications