பாம்பன் பாலத்தில் ரூ. 7 கோடியில் மராமத்து பணிகள்

தீவுப் பகுதியான ராமேஸ்வரத்தை இணைப்பது ரயில் பாலமும் பாம்பன் வாகன பாலமும் தான். இதில் ரயில் பாலம் ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டு சமீபத்தில் அகலப் பாதையாகவும் மாற்றப்பட்டுவிட்டது.
இந் நிலையில் 1988ம் ஆண்டில் தான் ராமேஸ்வரத்தையும் பாம்பனையும் இணைக்கும் சாலைப் போக்குவரத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி பாலம் என்ற இந்தப் பாலம் கடலின் மீது கட்டப்பட்டுள்ளது.
2.3 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் 79 தூண்களின் மீது அமைந்துள்ளது.
கப்பல்கள் கடக்க வசதியாக இந்தப் பாலம் இரண்டாகப் பிரியும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
உப்பு நீரில் கட்டப்பட்டுள்ளதாலும் உப்புக் காற்று காரணமாகவும் பாலத்தின் பலம் குறித்து அவ்வப்போது தொடர் ஆய்வுகள் நடந்தவாரே இருந்தன.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாலம் இத்தனை காலம் எந்தவிதமான பராமரிப்பும் இல்லாத நிலையிலும் மிக வலுவானதாகவே திகழ்ந்து வருகிறது.
இந் நிலையில் இப்போது இந்த பாலத்தில் சிறிய பிரச்சனைகள் எழுந்துள்ளன. கப்பல்கள் கடக்க வசதியாக பாலம் இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ள ஸ்பிரிங்குகள் சேதமுற்றுள்ளன.
இதையடுத்து பாலத்தை மராமத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 7 கோடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக ஒதுக்கியது.
உப்புக் காற்றை எதி்ர்கொண்டு தாங்கும் வகையில் பாலத்துக்கு ரசாயன பூச்சு செய்ய ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்புப் பணிகள் துவங்கியதும், பாலத்தில் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications