பெண்ணை மானபங்கம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்!
தேனி: பெண்ணை மானபங்கம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
தேனி அல்லி நகரைச் சேர்ந்தவர் அனுசுயா. இவர் தனது கணவர் செந்தில்குமார், தாய் பாண்டம்மாள் ஆகியோருடன் காவல் நிலையம் அருகில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த தலைமைக் காவலர் ஒருவர், அனுசுயாவை விசாரணைக்காக காவல் நிலையத்துக்குள் அழைத்து சென்றார்.
அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், அனுசுயாவின் ஜாக்கெட் மற்றும் சேலையை கிழித்து மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனுசுயாவின் உறவினர்களும் பொது மக்களும் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டனர்.
தகவல் அறிந்த டிஎஸ்பி உமா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications