நம்மை தேடி யார் வந்தாலும் கூட்டணி-டி.ராஜேந்தர்
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்காக, விஜயகாந்தை மேலிட பார்வையாளர் அருண்குமாருடன் தெலுங்கில் பேச வைக்கிறார்கள் காங்கிரஸ்காரகள் என ல.தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் லட்சியமே கீதம்' என்ற தலைப்பில் 9 கொள்கை விளக்க பாடல்களை விஜய டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார்.
அவரே எழுதி, இசையமைத்து, பாடிய இந்த பாடல்கள் அடங்கிய சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
மதுரை ஆதீனம் இந்த சிடியை வெளியிட்ட பின் ராஜேந்தர் பேசியதாவது:
கட்சி ஆரம்பித்தவுடனே முதலமைச்சர் ஆகி விட சிலர் கனவு காண்கின்றனர்.
வீட்டில் ஒரு மொழியும், வெளியே வந்ததும் ஒரு மொழியும் பேசுபவர்கள் (விஜய்காந்த்) எல்லாம் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகி விடலாம் என்று நினைக்கின்றனர்.
ஒரு தமிழ்நாட்டிற்கு எத்தனை முதலமைச்சர்கள் தான் வர முடியும்?.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்காக, விஜயகாந்தை மேலிட பார்வையாளர் அருண்குமாருடன் தெலுங்கில் பேச வைக்கிறார்கள் (காங்கிரஸ்காரகள்).
நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டவர்கள், ஆம்லேட் போட்டவர்கள் எல்லாம் நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். தமிழ் இன உணர்வு உள்ளவர்களை நான் ஒருங்கிணைப்பேன். எனக்கு எல்லா மொழியும் தெரியும். மற்ற மொழிகளை நான் மதிக்கிறேன். தமிழ் மொழியை துதிப்பேன்.
இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. இதை பார்த்துக்கொண்டு தமிழர்கள் சும்மா இருக்க முடியுமா?. இலங்கையில் இறப்பது தமிழர்கள். இதற்காக நாம் அழக்கூட கூடாதா?.
சிறுசேமிப்புத்துறையின் துணை தலைவராக நான் இருந்தாலும், இலங்கை தமிழர்களுக்காக நான் குரல் கொடுக்க பயப்பட மாட்டேன். இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
தமிழ் மக்களுக்காக பல தொல்லைகளை சந்தித்து இருக்கிறேன்.
முன்பு நான் கலைஞரை தலைவராக ஏற்றிருந்தேன். இன்று முதல் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் தலைவராக புறப்படுகிறேன்.
மதுரையில் லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்த இருக்கிறேன். இனி 80 சதவீதம் அரசியலில் ஈடுபட போகிறேன். 20 சதவீதம் தான் சினிமாவில் நடிப்பேன்.
நமது கட்சி மிகப்பெரிய சக்திமிக்க கட்சியாகும். நம்மை யார் கூட்டணி சேர்க்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும்.
அவருடன் கூட்டணி சேர போகிறோம், இவருடன் கூட்டணி சேர போகிறோம் என்ற பேச்சுக்கு இடமில்லை. நம்முடன் யார் வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றார் டி.ராஜேந்தர்.
இது எப்டி இருக்கு....
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications