மனநிலை பாதிக்கப்பட்டவர் தாக்கி வாலிபர் சாவு
சென்னை: மன நிலை பாதிக்கப்பட்டவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஏழை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருக்கழுக்குன்றம் அருகே மீனவர் குப்பத்தைச் சேர்ந்த லோகு என்பவரின் மகன் 29 வயதான முருகன் கடந்த மாதம் 25ம் தேதி மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது,
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதே சாலையில் சென்று கொண்டிருந்த ஆஸ்திரிய நாட்டுச் சுற்றுலாப் பயணி இம்லிங்கர் என்பவரைக் கல்லால் அடிக்க முற்பட்டார்.
அதைத் தடுத்து மனிதாபிமான உணர்வோடு சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றச் சென்றபோது, மனநிலை பாதிக்கப்பட்டவரால் தாக்கப்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த துயர நிகழ்வு குறித்த செய்தி கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த முதல்வர் கருணாநிதி உயிரிழந்த முருகனின் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன்,
அவரது மனிதாபிமான உணர்வைப் போற்றியும், அவரது பெற்றோரின் முதுமை மற்றும் ஏழ்மை நிலையைக் கருதி, அவரது குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட ஆணையிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications