பெண்களுக்கு காண்டம் - 5 ரூபாய்க்குக் கிடைக்கும்
டெல்லி: எய்ட்ஸ் பரவலைத் தடுக்க பெண்கள் பயன்படுத்தும் வகையிலான கருத்தரிப்பு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கருத்தரிப்பு சாதனம் 5 ரூபாய்க்கு விற்கப்படும்.
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விழிப்புணர்ச்சி பிரசாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரசாரங்களில் ஆணுறையின் பயன்பாடு அதிக அளவில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் பல ஆண்கள், ஆணுறையை பயன்படுத்த விரும்புவதில்லை.
இதையடுத்து பெண்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய சுகாதாரத் துரை இப்போது, பெண்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் கருத்தரிப்பு உறைகளை விற்பனையில் விட தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்த பெண்களுக்கான காண்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் பாப்புலர் ஆகவில்லை.
தற்போது இங்கிலாந்திலிருந்து 15 லட்சம் பெண்களுக்கான காண்டத்தை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் இறக்குமதி செய்யவுள்ளது.
இந்த கருத்தரிப்பு சாதனத்தின் விலை ரூ. 5 மட்டுமே இருக்கும்.
முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இது விற்பனைக்கு விடப்படும். அதன் பின்னர் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications