அரசு பஸ்களில் போலி டிக்கெட்-2 கண்டக்டர்கள் கைது!
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் டிக்கெட்டுக்களை போலியாக அச்சடித்துப் புழக்கத்தில் விட்ட இரண்டு கண்டக்டர்கள் சிக்கியுள்ளனர். இந்த மோசடியில் மேலும் பல கண்டக்டர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை நகரப் பேருந்துகளில் பெருமளவில் போலி டிக்கெட்டுக்கள் நடமாடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
இந் நிலையில் 57ம் எண் பேருந்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அந்தப் பேருந்தின் கண்டக்டர் வைத்திருந்த டிக்கெட்டுக்கள் போலியானவை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த விசாரணையில், போலி டிக்கெட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக சுப்ரமணி என்ற கண்டக்டர் சிக்கினார். இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர். ஏற்கனவே இப்படி போலி டிக்கெட் அச்சடித்து விட்டு சஸ்பெண்ட் ஆனவர்.
மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் மறுபடியும் போலி டிக்கெட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளார்.
இவருடைய வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் போலி டிக்கெட்டை வடிவமைத்து அதை வெளியி்ல் அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளார் சுப்ரமணி. இவருடன் இன்னொரு கண்டக்டரும் சிக்கியுள்ளார்.
ஆனால் இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல கண்டக்டர்களும் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதில் இதுவரை லட்சக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications