தனி தெலுங்கானா-ஆந்திராவை பிரிக்க பாபா எதிர்ப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க சாய் பாபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தனி தெலுங்கானா மாநில கோரிக்கை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்தக் கோரி்க்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எல்எல்சிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு தெலுங்கானா பகுதி மக்களிடமும் பெரும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா கூறுகையில்,
ஆந்திராவை தெலுங்கானா, ராயலசீமா என்று தனித் தனியாக பிரிக்க வேண்டும் என்று சிலர் போராடி வருகிறார்கள். ஒரு சிலரது சுயநலம் காரணமாகத் தான் தனி மாநில கோரிக்கை எழுந்தது. போராட்டமும் நடந்து வருகிறது.
ஆந்திராவை துண்டு துண்டாக பிரித்தால் மாநிலத்தின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும். ஒன்றாக சேர்ந்து இருந்தால் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய முடியும்.
எனவே தனி மாநில பிரிவினை போராட்டத்தை யாரும் ஆதரிக்கக் கூடாது. பிரிவினைவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஒற்றுமையாக இருந்தால் நிறைய சாதிக்கலாம்.
மாநிலத்தைப் பிரித்தால் அது பெரிய பாவம் என்றார்.
சாய்பாபாவின் இந்தப் பேச்சுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் கூறுகையில், பாபா தன்னை மதம் தொடர்பான விஷயங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலில் தலையிடக் கூடாது.
தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது இந்த பாபாக்கள் எங்கிருந்தார்கள்?.
பாபா நேரடியாக அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். அதை விட்டுவிட்டு அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications