ராஜ்யசபா தேர்தல்: ராமதாஸ் ஒத்துழைக்க தா.பாண்டியன் கோரிக்கை

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே பாமகவுக்கு திமுக ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கி விட்டது. அதில் அவரது மகன் அன்புமணி நின்று அமைச்சராகவும் ஆகி விட்டார். எனவே மீண்டும் சீட் கேட்காமல், கூட்டணி முடிவை ஏற்று, ராஜ்யசபா தேர்தலில் ஒத்துழைக்க வேண்டும்.
ராஜ்யசபா சீட்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், திமுகவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ராமதாஸ் கூறுவது தவறானது.
அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கும், எங்களுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக ஒப்பந்தம் செய்தது. அதன்படி கடந்த ஆண்டு சிபிஐக்கு ஒரு சீட் தரப்பட்டது. இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தரப்பட்டுள்ளது.
எனவே இதை ராமதாஸ் புரிந்து கொண்டு, திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாமகவின் மது விலக்கு கோரிக்கை தமிழகத்தில் சாத்தியம் இல்லாதது. காரணம், பக்கத்து மாநிலங்களில் எல்லாம் மதுவுக்கு எந்தத் தடையும் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்றார் பாண்டியன்.
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!











Click it and Unblock the Notifications