கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை: குழந்தையும் பலி
விருதுநகர்: வறுமை காரணமாக கணவன், மனைவி உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவர்களது 10 மாதக் குழந்தையும் தீயில் கருகி இறந்தது.
விருதுநகரில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தவர் சரவண குமார் (28). இவரது மனைவி இந்துமதி (21). இவர்களது 10 மாத குழந்தை அபிநயஸ்ரீ.
சரவணகுமாருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வறுமையால் தினந்தோறும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இந் நிலையில் நேற்று கணவன், மனைவி இருவரும் தனித் தனியே தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டனர்.
அலறி துடித்த இவர்களை நோக்கி அழுதபடியே வந்த குழந்தையும் தீயில் கருகியது.
உடல் கருகி உயிருக்கு போராடிய மூவரையும் அக்கம்பக்கத்து வீட்டினர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர்.
இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications