கைதி கணேசனை ஆஜர்படுத்தக் கோரி புது வழக்கு
சென்னை: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி கணேசனை சந்திக்க அனுமதி தருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது வழக்கறிஞர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, கைதி கணேசன் மற்றும் அவரது மனைவியாக கூறப்பட்ட நதியாவின் விவகாரம்.
தனது மனைவி நதியாவை சிறை ஊழியர்கள் நான்கு பேர் கற்பழித்து விட்டதாக கூறி கணேசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நதியாவை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவர் கன்னித் தன்மையை இழக்காதவர் என்பதை நிரூபிக்கும் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தனர். மேலும், நதியாவின் தாயாரும் தனது மகளுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று தெரிவித்தார். இதனால் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
கைதி கணேசனின் வக்கீல்களை கண்டித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி, யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது வழக்கு தொடருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஆனால் கைதி கணேசனுக்கும், நதியாவுக்கும் இருந்த தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்பட ஆதாரங்களும், கணேசனுக்கு நதியா எழுதிய காதல் கடிதங்களும் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை அறிய உண்மை கண்டறியும் குழுவினர் களம் இறங்கினர். நதியா, கணேசன் ஊர்களுக்குச் சென்று விசாரித்த இக்குழுவினர், கணேசனையும் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு சிறை நிர்வாகம் அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் கணேசனின் வழக்கறிஞர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கணேசனுக்கு சிறையில் பெரும் சித்திரவதை நடக்கிறது. தினசரி அவரை சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தி வருகின்றனர். ஹேபியஸ் கார்பல் மனுவைத் தாக்கல் செய்தற்காக அவரை சித்திரவதை செய்து வருகின்றனர்.
அவரை சித்திரவதை செய்வதை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கணேசனை மற்ற கைதிகளிடமிருந்து பிரித்து தனியாக வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
அவரை சந்திக்க எனக்கு சிறை நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது. கணேசன் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நதியா கற்பழிக்கப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து அறியவும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நதியா கற்பழிக்கப்படவில்லை என்று போலீஸார் தாக்கல் செய்த மருத்துவ சான்றிதழ் போலியானது. எனவே அந்த போலி சான்றிதழைக்க கொடுத்த வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications