விறுவிறு வாக்குப்பதிவுடன் முடிந்தது மலேசிய தேர்தல்

Subscribe to Oneindia Tamil

Polling in Malaysian election
கோலாலம்பூர்: சிறு சிறு சம்பவங்களுடன் மலேசிய நாடாளுமன்றம், மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்தது. மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.

மலேசிய நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.

பிரதமர் அப்துல்லா அகமது படாவி அப்துல்லா இன்று காலை பினாங்கில் உள்ள செகோலா கெபாங்சன் பெர்மடாங் பெர்டாம் என்ற இடத்தில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி ஜீன் அப்துல்லாவும் வாக்களித்தார்.

பின்னர் படாவி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப்பதிவு நாடு முழுவதும் அமைதியாக நடக்கிறது. எந்தவித வன்முறையும் இல்லை. மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக், தனது மனைவி ரோஸ்மா மன்சூருடன் பஹாங் மாகாணத்தில் வாக்களித்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், சுங்காய் சிபுட் எம்.பி தொகுதியில் போட்டியிடுபவருமான டத்தோ சாமிவேலு தனது மனைவியுடன் வாக்களித்தார்.

கெலன்டன், பெராக், செலாங்கூர், பெர்லிஸ், டெராங்கனு உள்பட அனைத்து மாகாணங்களிலும் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. மாலை 3 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

டெராங்கனுவில் வன்முறை:

வடக்கு டெராங்கனு மாகாணத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 3 போலீஸ் கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அந்தக் கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர்.

அவர்கள் அனைவரும் மலேசிய முஸ்லீம் கட்சியைச் ேசர்ந்தவர்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போலி வாக்காளர்கள் என சந்தேகப்பட்ட சிலரை அவர்கள் பிடித்து சோதனையிட்டதால் வன்முறை மூண்டது.

இதேபோல பினாங்கில், எதிர்க்கட்சியைச் ேசர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கூடி அரசை எதிர்த்துக் கோஷமிட்டு கலாட்டாவில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறுப்பினும் போலீஸார் உடனடியாக தலையிட்டு வன்முறையைத் தடுத்து விட்டனர்.

இன்றே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இரவு 7 மணியளவில் முதல் சுற்று முன்னணி நிலவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கூட்டணிக்கு தமிழர்கள் மற்றும் சீனர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்காது என்ற கருத்து நிலவுவதால் தேர்தல் முடிவுகளை மலேசிய மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+