டெல்லி சிபிஎம் தலைமையகம் மீது ஆர்எஸ்எஸ் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் அலுவலகத்தின் மீது இன்று ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அவர்கள மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பலர் காயமடைந்தர்.
இந்தத் தாக்குதலில் மூத்த மார்க்சி்ஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்பட பலரது கார்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
முன்னதாக கடந்த வாரத்தில் கேரளத்தின் கன்னூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் இரு பாஜக, இரு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சிபிஎம் தொண்டர்களால் கொல்லப்பட்டனர். பாஜகவினர் நடத்திய தாக்குதலில் 2 சிபிஎம் தொண்டர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக டெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது ஆர்.எஸ்.எஸ், பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications