கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் பலி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கொடியில் காயபோட்டிருந்த துணியை எடுத்தபோது மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் பலியானார்கள். கர்ப்பிணி காயமடைந்தார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவர் தனது வீட்டிற்கு முன்பு பூச்செடி வளர இரும்பு கம்பியில் கொடி கட்டியுள்ளார். அதன் அருகில் இருந்த மின்கம்பத்தில் அந்த கம்பி உரசிக் கொண்டிருந்ததால் அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை யாரும் அறியவில்லை.

இந்த நிலையில், இரும்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணிகளை பத்தரகாளிமுத்து எடுத்தபோது மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடிவந்த மாமியார் ஜானகியையும் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து இருவரையும் காப்பாற்ற முயன்ற ஜானகியின் இன்னொரு மருமகள் சரோஜா முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. சரோஜா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கொடுத்த தவகலை அடுதது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூவரையும் தனது ஜீப்பில் ஏற்றி துத்துக்குடி அரசு மருததுவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியில் ஜானகி, பத்திரகாளி ஆகிய இருவரும் இறந்தனர். சரோஜா முத்தையபுரத்தில் உள்ள தனியார் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+