திமுக எம்எல்ஏ மீது வழக்கு: இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!
கரூர்: குளித்தலை திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியபோது மேடையை நோக்கி அரிவாள், தடி, கம்புகளோடு பாய்ந்த திமுகவினர் நாஞ்சில் சம்பத்தை தாக்கினர்.
தடுக்க முயன்ற கட்சி நிர்வாகிகள் 11 பேரும் காயமடைந்தனர்.
குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் 300 திமுகவினர் இந்தத் தாக்குதல் நடத்தியதாக மதிமுக புகார் தந்தது.
இதையடுத்து மதிமுகவினரை தாக்கியதாக திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம், அவரது தம்பி மகேந்திரன், அரசு வக்கில் சாகுல் அமீது உள்பட 9 பேர் மீது குளித்தலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார்.
இந் நிலையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி திடீரென்று அரவாக்குறிச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஈரோடு இன்ஸ்பெக்டர் முருகன் நியமிக்கப்பட்டார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications