பாமக மாஜி மகளிர் அணி செயலாளர் வீட்டில் குண்டு வீச்சு
ஜெயங்கொண்டம்: பாமகவில் இருந்து நீக்கப்பட்ட மகளிர் அணி செயலாளர் வீடு மீது பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செல்வி செல்வம் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி மாநில செயலாளராக இருந்தார்.
நேற்று இவர் திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்டார்.
இந் நிலையில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.
நேற்று இரவு செல்வி செல்வம் தனது கணவர் செல்வத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 3 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென்று செல்வி செல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து செல்வி செல்வம் கூறுகையி்ல்,
அழிச்சுக்குடியைச் சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி போலீஸ் ஐ.ஜி.யிடம் கொடுத்துள்ள புகாரில் மாநில வன்னியர் சங்க தலைவரான முன்னாள் எம்எல்ஏ குரு, அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் வைத்திலிங்கம், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் (மேற்கு) கொளஞ்சி ஆகியோர் தனது மனைவி இந்திராவை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.
கடந்த 1ம் தேதியில் இருந்து இந்திராவை காணவில்லை, அவரை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியி்ருந்தார்.
இவ்வாறு கணேசன் புகார் கூற நான் தான் காரணம் என்று அவர்கள் நினைத்து கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
என்னையும், என் கணவரையும் கொலை செய்யும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் மேலும் தொடர்ந்தால் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரின் ரகசியங்களை அம்பலடுத்துவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications