குழந்தையை மாற்றி வைத்த இந்திய நர்ஸ் டிஸ்மிஸ்

செளதி அரேபியா, நஜ்ரன் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த பெண் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
4 ஆண்டுகளுக்கு முன் துருக்கி மற்றும் செளதியைச் சேர்ந்த பெண்கள் பிரசவத்துக்காக அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை நர்ஸ் தவறுதலாக மாற்றி வைத்துவிட்டார்.
குழந்தைகளை பார்க்க வந்த அந்த பெண்களின் கணவர்கள் குழந்தைகள் வித்தியாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். துருக்கியைச் சேர்ந்த பெண்ணின் கணவர், தன்னுடைய குழந்தை பிரவுன் நிறத்தில் இருப்பதால் மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், மனைவியை கொல்லப் போவதாகவும் மிரட்டினார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது.
குழந்தையை டிஎன்ஏ பரிசோதனை செய்துப் பார்த்தபோது குழந்தைகள் மாறிப் போனது தெரிய வந்தது. இதையடுத்து 2 தம்பதிகளுக்கும் மருத்துவமனை 6 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கியது.
இந்த இரு குழந்தைகளின் பெற்றோர்களும் இப்போது அருகருகே ஒரு வீடுகள் எடுத்து தங்கியுள்ளனர். குழந்தைகளை மாற்றிக் கொள்ள வசதியாக ஒருவரோடு ஒருவர் பழகவும், குழந்தையுடன் பழகவும் அவர்கள் அருகருகே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் இப்போது இந்திய நர்சை மருத்துவமனை நிர்வாகம் வேலையை வி்ட்டு நீக்கியுள்ளது. மேலும் தொடர்ந்து பணியாற்ற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதனால் அந்த நர்ஸ் இந்தியா திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே பிரச்னை தொடர்பாக எகிப்தைச் சேர்ந்த ஒரு டாக்டரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு நர்சும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், செளதியை சேர்ந்த இன்னொரு நர்ஸ் வெறும் அபராதத்துடன் விடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications