இலங்கை ராணுவ தளபதிக்கு வரவேற்பா-இந்தியாவுக்கு புலிகள் கண்டனம்

இது குறித்து வன்னியில் இருந்து புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகி, தமிழர்கள் மீது பயங்கரமான வன்முறைத் தாக்குதலை நடத்தி வரும் இலங்கையின் ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்த இந்தியாவின் செயல் கண்டனத்துக்குரியது என புலிகள் கூறியுள்ளனர்.
நீண்ட காலத்துக்குப் பின் இந்தியாவுக்கு புலிகள் நேரடியாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மட்டக்களப்பில் கருணா கட்சி வெற்றி:
இதற்கிடையே இலங்கையின் மட்டக்களப்பில் நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் குழுவைச் சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இலங்கையின் கிழக்கில் உள்ள மட்டக்களப்பு தமிழர்கள் நிறைந்த மாவட்டம். இந்தப் பகுதியை சில மாதங்களுக்கு முன்பு புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக மீட்டது இலங்கை.
இதையடுத்து நேற்று ஒரு நகராட்சி மற்றும் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று அங்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (ரனில் கட்சி) ஆகியவை புறக்கணித்து விட்டன.
இந்த நிலையில் அங்கு தேர்தல் நடந்தது. இந்த மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
மொத்தம் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் 19 இடங்களில் போட்டியிட்ட கருணா குழுவினருக்கு 11 இடங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
கருணா இப்போது திருட்டு பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications