நாளை பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்: முக்கிய முடிவுக்கு வாய்ப்பு?

அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கும் ஒரு சீட் வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரி வருகிறார். ஆனால் இதை திமுக நிராகரித்து விட்டது. ஏற்கனவே பாமகவுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டத்தில் சிபிஐக்கும், பின்னர் தற்போது சிபிஎம்முக்கும் சீட் தரப்படவுள்ளது. இதுவரை சீட் தரப்படாத காரணத்தால் காங்கிரஸுக்குக் கூடுதலாக ஒரு சீட் தரப்படுவதாக முதல்வர் கருணாநிதி விளக்கமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் ராமதாஸ் தனது நிலையிலிருந்து பின் வாங்கவில்லை. கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, மார்ச் 15ம் தேதி வரை (அன்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்) அவகாசம் தருவதாக கெடு விதித்தார்.
இந் நிலையில் அதிரடியாக திமுக தனது இரு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து சிபிஎம்மும் அறிவித்தது. காங்கிரஸ் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இதையடுத்து பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் மீண்டும் நாளை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் கட்சியின் நிலை என்ன, யாரை ஆதரிப்பது, நடு நிலை வகிக்கலாமா, திமுக கூட்டணியிலிருந்து விலகலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
நாளைய கூட்டத்தில் பாமக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications