பால் விலை உயர்வுக்கு ஜெ. கடும் கண்டனம்
சென்னை: ஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 என தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விலை வைத்து பால் விற்கப்படுவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பால் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, கடந்த 21 மாதங்களில் இது 2வது விலை உயர்வாகும். இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெரும் பாதிப்படைவார்கள். எனவே இந்த விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பால் விலை உயர்வு காரணமா, டீ, காபி, ஐஸ்க்ரீம் போன்ற பால் சார்ந்த பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகுப்பு மக்களின் குடும்ப பட்ஜெட்டிலும் ரூ. 500 அளவுக்கு துண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பால் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 25 பைசா உயர்த்தியது திமுக அரசு. ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திப்பதாக கூறி இந்த விலை உயர்வை அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ரூபாய் விலை உயர்வை அறிவித்துள்ளது. மேலும் சத்தம் போடாமல், ஆவினின் பிற பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.
எனது ஆட்சிக்காலத்தின்போது பால் கொள்முதல் விலையை மட்டுமே உயர்த்த உத்தரவிட்டேன். விற்பனை விலையை நான் உயர்த்தியதே இல்லை.
எனவே மக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எனது அரசு கடைப்பிடித்த வழிமுறைகளை திமுக அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications