பள்ளிகளுக்கு அருகில் மதுக் கடைகள்-பாஜக போராட்டம்
சென்னை: கோயில் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சித் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் அதிகளவில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்துவதில் கடந்த 25 ஆண்டுகளாக தடுமாற்றம் நிலவி வருகிறது. பார் வசதிகளுடன் டாஸ்மாக் கடைகளை நடத்தி அரசு இதில் வருமானம் பார்க்கிறது.
கோயில் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற திமுக அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் இல.கணேசன்.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications