பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து - பெட்டி எரிந்து சாம்பல்

சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு வழக்கம் போல பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இன்று காலை 5.30 மணியளவில் ரயில் திண்டுக்கல் அருகே வட மதுரை - செங்குளத்துப்பட்டிக்கு இடையில் சென்று கொண்டிருந்தபோது, என்ஜினுக்கு அடுத்து உள்ள முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
இதைப் பார்த்த பயணிகள் அவசரம் அவசரமாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் பெட்டியிலிருந்து வேகமாக இறங்கினர். இந்த நிலையில் பெட்டியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவத் தொடங்கியது.
ரயிலை நிறுத்திய பின்னர் அந்தப் பெட்டியை மட்டும் தனியாகப் பிரித்து விட்டனர். சுமார் 2 மணி நேரத்தில் அந்தப் பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. அனைத்துப் பயணிகளும் கீழே குதித்து தப்பியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
அந்த அன் ரிசர்வட் பெட்டியோடு, சரக்குப் பெட்டியும் இணைந்திருந்தது. அந்தப் பெட்டியிலிருந்துதான் தீ பரவியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அதிகாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் - திருச்சி பாசஞ்சர் ரயில் இந்த விபத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications