ஊட்டி: வறட்சியால் முதுமலை சரணாலயம் மூடல்
ஊட்டி: வறட்சி காரணமாக முதுமலை வன சரணாலயம் வரும் மே மாதம் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.
இதனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சரணாலய காப்பாளர் அறிவித்துள்ளார்.
நீலகிரியில் உள்ள முதுமலை சரணாலயத்தில் யானைகள் முகாம் உள்ளது. அரிய வகை விலங்குகளும் உள்ளன. இந்த சரணாலயத்தைக் காண ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர யானை சவாரியும் வாகன சவாரியும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடைக் காலம் துவங்கியுள்ளதால், வனத்தில் பசுமை குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது. போதிய உணவு இல்லாமல் விலங்குகள் இடம் பெயர்கின்றன.
இந்நிலையில் சரணாலயம் மூடப்படுகிறது.
இது குறித்து முதுமலை சரணாலய காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா வெளியிட்ட அறிக்கையில்,
முதுமலை வன உயிரின தேசிய பூங்கா பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையும் வறட்சியும் நிலவி வருவதால், தாவரங்கள் காய்ந்துள்ளன.
தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இன்று (12 ம் தேதி) முதல் மே மாதம் 31ம் தேதி வரை, அல்லது மறு உத்தரவு வரும் வரை, முதுமலை தேசிய பூங்கா தற்காலிமாக மூடப்படுகிறது என்று கூறியுள்ளார்.
கடும் வறட்சி நிலவும்போது சரணாலயம் மூடப்படுவது வாடிக்கையே என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications