ஜி.கே.வாசன் மீண்டும் போட்டி
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் இரு காங்கிரஸ் வேட்பாளர்களில் ஜி.கே.வாசன் பெயரை மட்டும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. நாளை இரவுக்குள் 2வது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் திமுக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
திமுக வேட்பாளர்கள் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மீண்டும் போட்டியிடுகிறார். இத்தகவலை டெல்லியில் கட்சிப் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று அறிவித்தார்.
2வது வேட்பாளர் என்னவாயிற்று என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது இன்னும் முடிவாகவில்லை. நாளை இரவுக்குள் முடிவாகி விடும் என்றார் ஆஸ்கர்.
2வது இடத்தைப் பிடிக்க காங்கிரஸில் உள்ள பல்வேறு கோஷ்டிகளும் கடுமையாக மோதிக் கொண்டிருப்பதால் 2வது வேட்பாளர் பெயரை இப்போது வெளியிட வேண்டாம், கடைசி நேரத்தில் வெளியிடலாம் என கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications