வருமான வரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு வாபஸ்

கடந்த 1998-99ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக வருமான வரித்துறை சமரசத் தீர்வு மையத்தில் பின்னர் அவர் தாக்கல் செய்தார். இதை சமரசத் தீர்வு மையம் ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து வருமானவரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமரசத் தீர்வு மையத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையிடம்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் அதன் பின்னரே சமரசத் தீர்வு மையத்தை நாட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்களது மனுவை திரும்பப் பெறுவதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications