அரிசி கடத்தினால் 7 ஆண்டு ஜெயில்
சென்னை: ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் கடுமையான தண்டனை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலை தடுப்பது தொடபான ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையி்ல் கோவையில் நடந்தது.
அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக எல்லைப் பகுதிகளில் 24 மணி நேர ரோந்து பணி மேற்கொள்வது, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தும் லாரியின் உரிமத்தை ரத்து செய்யவும், டிரைவரின் லைசென்ஸை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
அதே போல கோவை, கன்னியாகுமரி, தேனி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் விடுமுறை நாட்களிலும் இரவு நேர ரோந்து பணியே மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கடத்தல்காரர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வாங்கித் தர குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
ரயில், பஸ்களில் அரிசி கடத்துபவர்கள், உதவும் அரசு அலுவலர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோர் மீதும் துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி கடத்தல்காரர்கள், போலி ரேஷன் கார்டுகள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொலைபேசி எண்கள்: 044-24338974, 25670204
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications