டாக்டர் ஹனீப்பை விசாரிக்க ஆஸி. நீதிபதி வருகை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தொடர்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்பிடம் விசாரணை நடத்த அந்நாட்டு நீதிபதி வரவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் ஹனீப், இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையில், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அப்போதைய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் பிடிவாதம் காரணமாக ஹனீப் கிட்டத்தட்ட 12 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டது.
ஹனீப் குற்றம் செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை சிறையில் அடைத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் ஹனீப் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை ஆஸ்திரேலிய அரசு நியமித்துள்ளது.
இந்த விசாரணைக் கமிஷன், முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ், காவல்துறை தலைவர் மைக் கீட்லி ஆகியோரை விசாரிக்கவுள்ளது. முன்னாள் நியூ சவுத்வேல்ஸ் உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் கிளார்க் இந்த விசாரணை நடத்தவுள்ளார்.
மேலும் ஹனீப்பிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஹனீப்பை ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைப்பு விடப்படவுள்ளது. ஒருவேளை அவர் வர இயலாவிட்டால், நீதிபதி கிளார்க் பெங்களூர் வந்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications