தா.பாண்டியன் மீது நடவடிக்கை கோரும் இந்து மக்கள் கட்சி
சென்னை: கட்சித் தொண்டர்களை ஆயுதம் வைத்துக் கொள்ளுமாறு கூறிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா.பாண்டியன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரமானந்தம், வக்கீல் ராம் மனோகருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
மனுவில்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அக் கட்சியின் செயலர் தா.பாண்டியன் தீவிரவாதத்தை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு தொண்டர்கள் கும்பலாக செல்ல வேண்டுமென்றும் கத்தி மற்றும் குறுந்தடிகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும். இதன்மூலம் கட்சி தொண்டர்களை அவர் நேரடியாக தூண்டி விட்டுள்ளார்.
தி.நகரில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கத்திகளை சேகரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தா.பாண்டியன் தூண்டுதலின்பேரில் எங்கள் அமைப்பினர் தாக்கப்படலாம் என்று அஞ்சுகிறோம்.
இதுகுறித்து விசாரணை நடத்தி தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications